Skip to main content

நானும் தமிழன் தான்!. என் பூர்வீகம் கடலூர்!. இங்கிலாந்து பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சன்


உலகின் பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவரும், தற்போது விண்வெளி சுற்றுலா சென்றிருப்பவருமான ரிச்சர்ட் பிரான்சனின் மூதாதையர்கள் தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்தவர்கள் என்ற வியக்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.


விண்வெளி சுற்றுலா குறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த வரலாறு படைக்கப்பட்டுள்ளது. Virgin Group தலைவரும் உலகின் பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவருமான இங்கிலாந்தின் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 11 பேர் இன்று அவருடைய Virgin Galactic விண்வெளி நிறுவனத்தின் VSS Unity விண்வெளி ஓடம் மூலமாக நேற்று நியூ மெக்சிகோவில் இருந்து விண்வெளிக்கு பயணத்தை தொடங்கினார்கள்.



2000ம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தான் முதலில் விண்வெளி நிறுவனத்தை தொடங்கினார். மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது அவருடைய கனவாக இருந்தது. இந்த கனவை அவருடைய புளூ ஆரிஜின் நிறுவனம் மூலமாக நிறைவேற்ற இருக்கிறார். ஜூலை 20ம் தேதி ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் செல்ல இருக்கிறார். எனினும், பெசோஸுக்கு பின்னர் 2004ம் ஆண்டு விண்வெளி நிறுவனத்தை தொடங்கிய ரிச்சர்ட் பிரான்சன் இன்றைய பயணத்தின் மூலம் விண்வெளி பந்தயத்தில் முந்தியிருக்கிறார்.


புதிய வரலாறு படைக்க இருக்கும் இங்கிலாந்தின் பெரும் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனுக்கும் தமிழகத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என்று அவரே ஒரு சுவாரஸ்ய தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.


கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில், மும்பைக்கு வருகை தந்த ரிச்சர்ட் பிரான்சன், அவருடைய Virgin Atlantic நிறுவனத்தின் சார்பில் மும்பையிலிருந்து, லண்டனுக்கு நேரடி விமான சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், டி.என்.ஏ சோதனையின் மூலம் தன்னுடைய மூதாதையர்கள் தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்தவர்கள் என அறிந்து கொண்டதாகக் கூறினார்.

"எனது முந்தைய தலைமுறையினர் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், எங்கள் தொடர்புகள் எவ்வளவு வலிமையானவை என்பதை உணரவில்லை. 1793 ஆம் ஆண்டு முதல், எங்களது நான்கு தலைமுறைகள் இங்கு கடலூரில் வாழ்ந்திருக்கின்றனர். என் பெரிய, பெரிய, பெரிய பாட்டிகளில் ஒருவரான ஆரியா என்ற இந்திய பெண், என் பெரிய, பெரிய, பெரிய தாத்தாக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்,

உமிழ்நீர் மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகளின் மூலம் இந்த உண்மை எனக்கு தெரியவந்தது" என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Comments

Popular posts from this blog

ஒரு முழு ஓட்கா பாட்டிலை ஒரே மடக்கில் குடித்தால் என்ன ஆகும்? முயன்ற மாணவரின் பரிதாப நிலை..

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஓட்கா மது பாட்டிலை முழுவதுமாக குடித்து கோமா நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் 19 வயதான டேனியல் சாண்டுல்லி என்பவர் மிசோரி பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் சேருவதற்கான உடன் இருப்பவர்கள் சொல்லை கேட்டு ஓட்கா பாட்டிலை முழுவதுமாக குடித்து கோமா நிலையில் மூளை பாதிப்புக்குள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். டேனியல் கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி மிசோரி பல்கலைக்கழகத்தின் ஹாஸ்டலில் சேருவதற்கான சென்ர இடத்தில் அங்குள்ளவர்கள் மற்றமாணவர்கள் விலையாட்டாக ஒரு பாட்டில் ஓடாக மதுவை ஒரே மடக்கில் குடிக்க முடியுமா என சாவால் விடுத்து உள்லனர். தன்னை நிரூபிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக டேனியல் ஒரு பாட்டில் மதுவை குடிக்க போதை மூளைக்கு ஏறி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தொடர்ந்து டேனியலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பரிசோதனையில் அவரது இரத்தத்தில் ஆல்கஹால் உள்ளடக்கம் 0.486 சதவீதமாக இருந்ததுள்ளது, இது சட்டப்பூர்வ வரம்பை விட ஆறு மடங்கு அதிகமாகும். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் டேனியல், புத்துயிர் ...

கொசு வலை போன்ற உடையில் நடிகை ரம்யா நம்பீசன்.! அட நம்ம சேதுபதி பொண்டாட்டியா இப்படி என கலாய்க்கும் ரசிகர்கள்.!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். இவர் மலையாளத்தில் முதன் முதலாக 2000 ஆண்டு  சாயக்னம் என்ற மலையாளத் திரைப்படத்தில் அமலா என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலாக அறிமுகமானார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இவர் பல மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படியே படிப்படியாக மலையாளத்தில் முன்னணி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். இவர் தமிழில் முதல் முதலாக ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் வனஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு மீண்டும் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த ரம்யா நம்பீசன் ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் என்னதான் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு தமிழ் சினிமா மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கவில்லை ஆனால் மலையாளத்தில் கொடிகட்டி பறந்து வந்தார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகியாகும் பல திரைப்படங்களில் பாடலை பாடியுள்ளார் அதன் பிறகு தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ரம்யா நம்பீசன் 2016ஆம் ...

2022 ஆம் ஆண்டு உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகுது தெரியுமா?

  2019 ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்றினால் , 2020 ஆம் ஆண்டு முழுவதும் நாம் பெரும் சிரமத்தை சந்தித்தோம் . அதன் பின் 2021 ஆம் ஆண்டில் அந்த பெருந்தொற்றிற்கு ஒரு வழியாக ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து , தொற்றினை ஓரளவு கட்டுப்படுத்தி தற்போது 2021 ஆம் ஆண்டின் முடிவில் உள்ளோம் . அடுத்த புதிய ஆண்டான 2022 ஆம் ஆண்டில் காலடியை எடுத்து வைக்கவுள்ளோம் . கடந்த இரண்டு ஆண்டுகள் நமக்கு பெரும் சோதனை மற்றும் சவால் நிறைந்த ஆண்டுகளாக இருந்தன . ஆனால் 2022 ஆம் ஆண்டில் நம் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுமா , வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை கொண்டுவரப் போகும் ஆண்டாக இருக்குமா என்பதை அறிய நாம் ஆவலாக இருப்போம் . உங்களுக்கு 2022 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் , 2022 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு ராசி பலன்களைப் படித்துப் பாருங்கள் . மேஷம்: வேத ஜோதிடத்தின் அடிப்படையில் , ஜனவரி 16 ஆம் தேதிக்கு பின் செவ்வாய் தனுகு ராசிக்குள் நுழைவதால் , நிதியைப் பொறு...